இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 519 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 519 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 519 ஆக உயர்வடைந்து உள்ளது.
புதுடெல்லி,

சீனாவில் தோன்றி உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிர தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இதனால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுவரை உலக அளவில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சீனா தவிர்த்து, இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளது. சீனாவில் பாதிப்பு பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக சீனாவின் உகான் நகரில் இருந்து நாடு திரும்பிய கேரளவாசிகள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் இருவர், மருத்துவம் பயின்ற மாணவ மாணவிகள் ஆவர். இதனால் கேரளாவில் பேரிடர் என அறிவிக்கப்பட்டது. அவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். பின்னர் பேரிடர் தளர்த்தப்பட்டது.

தொடர்ந்து நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தது. இதனால் இந்தியாவில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 433 ஆக உயர்ந்து இருந்தது.

இந்நிலையில், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 500ஐ கடந்து உள்ளது. இதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 519 ஆக உயர்வடைந்து உள்ளது. இவர்களில் 39 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )