இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 31,787 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 31,787 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 31,787 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 36 நாட்கள் ஆகியுள்ளது. எனினும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தபாடில்லை.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 31,787 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1813 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1008 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 7797 பேர் மீண்டுள்ளனர். 22982 பேர் கொரோனாவுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநில அளவில், அதிகபட்சமாக மராட்டியத்தில் 9318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )