cheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap jerseyscheap jerseyscheap jerseys
இந்தியா சுயசார்புள்ள நாடாக மாறியுள்ளது: பிரதமர் மோடி - Dhinasakthi

இந்தியா சுயசார்புள்ள நாடாக மாறியுள்ளது: பிரதமர் மோடி

இந்தியா சுயசார்புள்ள நாடாக மாறியுள்ளது என நிகழ்ச்சி ஒன்றில் பேசும்பொழுது பிரதமர் மோடி பெருமிதமுடன் கூறினார்.
புதுடெல்லி,

பிரதமர் மோடி 16வது பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சியில் இன்று பேசும்பொழுது, உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து கொண்டு நாம் இணையதளம் வழியே இன்று தொடர்பில் இருந்து வருகிறோம்.

ஆனால், நமது மனது எப்பொழுதும் பாரத மாதாவுடன் தொடர்பில் உள்ளது. கடந்த ஆண்டுகளில், பிற நாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் தங்களது அடையாளங்களை அந்த நாடுகளில் வலுப்படுத்தி வந்தனர்.

இந்தியா கடந்த காலங்களில் கொரோனா பாதுகாப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் பரிசோதனை உபகரணங்கள் ஆகியவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தது. ஆனால், இன்று நாம் சுயசார்புள்ள நாடாக மாறியுள்ளோம் என பெருமிதமுடன் கூறினார்.

கொரோனா தடுப்புக்காக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் இரண்டு தடுப்பு மருந்துகளை கொண்டு மனித குலத்தினை காக்க இந்தியா தயாராக உள்ளது என அவர் கூறினார்.