இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று நிலவரம் – மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா நிலவரம்- 259 நாட்களில் இல்லாத அளவில் குறைவு

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து நாடு முழுவதும் மேலும் 443 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,58,880 ஆக உயர்ந்தது.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

இது கடந்த 259 நாட்களில் இல்லாத அளவில் குறைவாகும். நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 5,297 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 96 ஆயிரத்து 237 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து நாடு முழுவதும் மேலும் 443 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,58,880 ஆக உயர்ந்தது.

கொரோனாவின் பிடியில் இருந்து நேற்று ஒரேநாளில் 15,021 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 36 லட்சத்து 83 ஆயிரத்து 581 ஆக உயர்ந்தது. தற்போது 1,53,776 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 250 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 52,39,444 டோஸ்களும், இதுவரை 106 கோடியே 85 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 10,09,045 மாதிரிகளும், இதுவரை மொத்தம் 61.02 கோடி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.