ஆப்பிரிக்காவுக்கு 100 கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்கும் சீனா : ஷிச்சின்பிங்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் காணொலி மூலம்
சீன – ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 8ஆவது அமைச்சர் நிலைக் கூட்டத்தின் துவக்க
விழாவில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்
இவ்வாண்டு, சீனா – ஆப்பிரிக்கா இடையே தூதாண்மை உறவு தொடங்கப்பட்டதன்
65ஆவது ஆண்டு நிறைவு ஆகும். கடந்த 65 ஆண்டுகளில், இரு தரப்பும், தனிச்சிறப்புமிக்க
ஒத்துழைப்புப் பாதையைக் கண்டிபிடித்து, ஒன்றுக்கு ஒன்று உதவி அளிக்கும் சிறந்த
அத்தியாயத்தை எழுதி, புது ரக சர்வதேச உறவில் சிறந்த முன்மாதிரியை
உருவாக்கியுள்ளன என்றார்.
கோவிட்-19 தொற்று நோய் பரவலை எதிர்க்கும் விதம் ஒற்றுமையுடன் செயல்படுவது,
பயனுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்குவது, தூய்மையான வளர்ச்சியை முன்னெடுப்பது,
நியாயம் மற்றும் நீதியைப் பேணிக்காப்பது ஆகிய 4 ஆலோசனைகளை ஷிச்சினிபிங்
முன்வைத்தார்.
ஆப்பிரிக்காவுக்கு 100 கோடி டோஸ் தடுப்பூசிகளை மேலதிகமாக சீனா விநியோகிக்கும்.
அவற்றில், 60 கோடி டோஸ் தடுப்பூசிகள் நன்கொடையாக அளிக்கப்படும். மற்ற 40 கோடி
டோஸ் தடுப்பூசிகளையும் சீன தொழில் நிறுவனங்கள், ஆப்பிரிக்காவின் தொடர்புடைய
நாடுகளுடன் இணைந்து கூட்டாக உற்பத்தி செய்து வழங்கும். மேலும், ஆப்பிரிக்க
நாடுகளுக்கு உதவி அளிப்பதுடன் 10 மருத்துவ மற்றும் சுகாதாரத் திட்டப்பணிகளையும்
நடைமுறைப்படுத்தி, ஆப்பிரிக்காவுக்கு 1,500 மருத்துவப் பணிகளையும் பொது சுகாதார
வல்லுநர்களையும் சீனா அனுப்பும். சீனாவின் உதவியுடன், ஆப்பிரிக்காவில் வறுமை
குறைப்பு மற்றும் வேளாண்மைத் துறைக்கான 10 திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும்.
அதில், ஆப்பிரிக்காவுக்கு 500 வேளாண் வல்லுநர்களை சீனா அனுப்பும். சீன
நிறுவனங்கள் ஆப்பிரிக்காவில் சீன- ஆப்பிரிக்க வளர்ச்சி மற்றும் வறுமை குறைப்புக்கான
செயல் விளக்க கிராமத்தை அமைப்பதற்கும் சீனா ஊக்கம் அளிக்கும் என்று ஷிச்சின்பிங்
தெரிவித்தார்.