cheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap jerseyscheap jerseyscheap jerseys
ஆந்திராவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு - Dhinasakthi

ஆந்திராவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் பதிவாகி வருகிறது.
ஐதராபாத்,

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்ட நிலையில், அரசு மேற்கொண்ட தீவீர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மிகக் குறைந்த அளவில் பதிவாகி வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த நிலவரத்தை ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆந்திராவில் இன்று 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,84,689 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை 7,128 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் தற்போது 2,607 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 8,74,954 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.